அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த இலேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே நீ
1.
உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது _ சோர்ந்து
2.
ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே _ சோர்ந்து
3.
காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாத பரலோகம் நாடுகிறோம் _ சோர்ந்து
4.
கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே _ சோர்ந்து
5.
மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம் _ சோர்ந்து
6.
மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார் _ சோர்ந்து